Thursday, 28 January 2016

அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை
ஒரு இளைஞன் ஆனந்தமாக குளிக்க வேண்டும் என நினைத்து அதிகாலையிலேயே குளியல் சோப்பு எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றான். நீண்டநெடு நேரமாக கடற்கரையில் கடல் நீரையே பார்த்துக்கொண்டிருந்தான். மாலை சுமார் நான்கு மணிக்கு அவனையே கவனித்திருந்த பெரியவர் ஒருவர், “ தம்பி மனம் வருத்தமாக இருக்கிறாயா? வாழ்க்கையென்றால் எல்லாமும் இருக்கும், மனம் தலராமல் வீட்டிற்குத் திரும்பு” என அறிவுறுத்தினார். உடனே அந்த இளைஞன் நான் எப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு எல்லாம் தெரியும் என பதிலளித்தான்.
அந்த பெரியவர் “தம்பி என்னை மண்ணித்துக்கோள், தயவு செய்து என்ன நடந்தது எதை செய்வதற்காக இங்கே நிற்கிறாய்” என அவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்டார். கோபம் கொண்ட அந்த இளைஞன், “நானே அலை எப்பொழுது ஓயும், நுரை எப்பொழுது மறையும் நான் எப்பொழுது குளிக்கலாம்  என்று காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
இளைஞனின் அறியாமையை அறிந்த பெரியவர், தம்பி அலை எப்போதாவது ஓய்ந்ததுண்டா, கடலில் நுரை இல்லாத அலை உண்டா தம்பி போய் குளி, குளித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்குத் திரும்பு என்றார்.
நேசமிகு நண்பர்களே, இன்று சிலர் ஆன்மிகத்தில் ஈடுபட தக்க வயதும் காலமும் வரும் என காத்திருக்கின்றனர். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் நமக்கு பல கடமைகள் இருக்கும்போது ஆன்மிகம் தேவையா என நினைக்கவும்  செய்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் கடமைகள் என்னும் அலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபட அதற்கென காலம் வரும் என காத்துக்கொண்டிருப்பது கடல் அலைகள் ஓயும் என காத்திருப்பதற்குச் சமம். ஆன்மிகம் என்பது குடும்ப வாழ்க்கைக்கு எதிரானது அல்ல, வாழ்க்கையை வழி நடத்துவது. பிறந்தது முதலே சரியான முறையான ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்ந்து ஆன்மிகத்தில் எவ்வயதிலும் எப்பொழுதும் ஈடுபடுவோமாக.
ஆன்மிகத்தில் ஈடுபடுவதே பிறவியின் தலையாய கடமை. . . . .

திருசூர்.சிவ.இராம.ஜோதி

No comments:

Post a Comment