Wednesday, 16 December 2015

மெய்ஞானத்தில் விஞ்ஞானம்

மெய்ஞானத்தில் விஞ்ஞானம்
சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசி என்ற திருத்தலத்தில், முதலையால் விழுங்கப்பட்ட ஒரு சிறுவனை,  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே வளச்சியோடு அந்த முதலையின் வாயிலிருந்து வரவழைத்தார். இந்த நிகழ்வைக் கேட்ட ஒருவர், இது அறிவியல் பூர்வமாக நம்பமுடியவில்லையே என ஒரு ஆன்மீகவாதியிடம் வினா எழுப்பினார். அதற்கு அந்த ஆன்மீகவாதி அளித்த பதில் ……
நண்பரே அறிவியலானது எல்லா நேரத்திலும் உண்மையாகத் தோன்றாது. எடுத்துக்காட்டாக 6-ம் வகுப்பில் ஒளி நேர்க்கோட்டில் செல்லும் என படித்தேன் ஆனால் பொறியியல் வகுப்பில் ஒளியானது உயர்ந்த அதிர்வலையுடன் பயணிக்கிறது என கூறினார்கள். அப்படியானால் 6-ம் வகுப்பில் படித்தது பொய் எனக் கூறலாமா?
ஒரு சமயம் கணவனும் மனைவியும் வெளிநாட்டிற்குச்  சென்றனர். அங்கு அளித்த மாமிச உணவினை உண்ட கணவருக்கு, அந்த உணவு ஒவ்வாமல் போனது. மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தபிறகு உடல்நிலை சரியானது. அவர்கள் நாடு திரும்பும் முன் அந்த மனைவி மருத்துவரிடம், இனி என் கணவருக்கு அந்த மாமிச உணவால் எந்த பாதிப்பும் இருக்காதே எனக் கேட்டார். அதற்கு அவர், அந்த மாமிச உணவின் துகள்கள் உங்கள் கணவரின் உடலில் 30 ஆண்டுகள் இருக்கும் எனத் தெரிவித்தார். இது ஒரு உண்மைச் செய்தி.
இப்பொழுது சுந்தரர் கதைக்கு வருவோம். அந்த முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனது செல் துகள்கள் அந்த முதலையின் உடலில் மூன்று ஆண்டுகள் இருந்திருக்காதா? அப்படி இருந்தால், அந்த செல் துகள்கள் சிறுவனாக வளர்ச்சியடைய முடியுமா எனக் கேட்கலாம், அதற்கும் பதில் இருக்கிறது. அதாவது இன்றைய அறிவியலில் ஒரு செல்லைக் கொண்டு ஜெனிடிக் எஞ்சினியரிங் மூலம் ஒரு உயிரை வளர்க்க முடியும். அதுபோல அந்த சிறுவனது செல்துகள்கள் சுந்தரரின் இறைபக்தியாலும் அந்தச் சிறுவனை மீட்க பாடிய பதிகத்தின் மந்திரசக்தியாலும் அந்தச் சிறுவனாக  வளர்ச்சியடைந்து வந்திருக்க வாய்பில்லையா என தனது விளக்கத்தினை முடித்தார்.
அன்பு நண்பர்களே, நமது ஆன்மீக கருத்துக்கள் சில சமயம் மூடத்தனமாகத் தோன்றலாம் ஆனால் அறிவியல் பூர்வமாக யோசித்தால், கடுகளவேனும் அதில் அறிவியல் உண்மைகள் புதைந்திருக்கும். அறிவியல் பூர்வமாக எடுத்துக்கொண்டிருந்தால் நமது ஆன்மீக சான்றோர்களும் அவர்களது கருத்துகளும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆணி வேராக இருந்திருக்கலாம் என்பதை நாம் உணரவேண்டும்.
ஆன்மீகம் என்ற மெய்ஞானத்தின் உட்கூறே      -    விஞ்ஞானம்.

-திருசூர்.சிவ.இராம.ஜோதி

No comments:

Post a Comment