Saturday, 14 November 2015

புண்ணிய செயல்கள் எதற்கு ?


வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறான். காட்டில் இருந்த துறவி அவனிடம் வேடனே நீ செய்வது பாவச்செயல் என்பது உனக்கு தெரியுமா எனக்கேட்டார். அதற்கு அவன் பாவமாவது புண்ணியமாவது எனக்கூறினான். வேடனே நீ வேட்டையாடும் விலங்குகள் குடும்பம் குடும்பமாக வாழ்கின்றன. அவற்றிற்குள்ளும் பாசமும் அன்பும் இருக்கிறது, நீ அவற்றை வேட்டையாடுவதால் அவை அனுபவிக்கும் வேதனை உன்னைத் தாக்கும் அதனால் உனது குடும்பம் பாதிக்கப்படும் என்று கூறினார். தனது தவற்றை உணர்ந்தான் வேடன்.
நண்பர்களே மனிதன் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ அல்லது சூழ்நிலக்காரணமாகவோ சில தவறுகளைச் செய்கின்றான். அத்தவறுகள் அவனுக்கு பாவங்களாக அமைந்து அவனை பின்தொடர்வதோடு அவனது சந்ததியையும் தொடர்கிறது.
ஒருவன் நல்லவனாகவும் நேர்மை உள்ளவனாகவும் இருந்தாலும் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்கிறான். தவறு செய்தவன் தண்டனை அனுவிக்க வேண்டும், ஆனால் நல்லவன் எதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்கு காரணம், அவன் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்கள் மிச்சம் இருந்தால், மறுபிறவி எடுத்து அந்த பாவபுண்ணியங்களின் பலனை மறுபிறவியில் அனுபவித்தே ஆக வேண்டும்.
அதுமட்டுமில்லாமல்
ஒருவன் அவனது முன்னோர் சேர்த்து வைத்த சொத்தை சுயமாக அனுபவிப்பதுபோல அவனது முன்னோர் செய்த பாவத்தின் பலனாக அதற்கான துன்பத்தையும் அனுபவித்தே ஆகவேண்டும்.
பெரியவர்கள் செய்த பாவங்களுக்கு அந்த பெரியவர்கள் மட்டுமில்லாமல் சிறியவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதே வாழ்வியல் நியதி. மாதா பிதா செய்தது மக்கள் தலையிலே என்ற பழமொழியை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.
எனவே பெரியவர்கள் செய்யும் பாவபுண்ணியங்கள் அவர்களது சந்ததிக்கு பலனாக அமையும் என்பதை உணர்ந்து புண்ணிய செயல்களில் மட்டுமே உள்ளத்தைச் செலுத்த வேண்டும் என்று உணர்வோமாக.

No comments:

Post a Comment